‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் | கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் |
கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருவது நடிகர் தர்ஷன் விவகாரம் தான். தனது காதலியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகள் அனுப்பி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி வரச்செய்து கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் நடிகர் தர்ஷன். அவரது காதலி பவித்ரா கவுடா உட்பட 15 பேருக்கு மேல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கன்னட திரையுலகை சேர்ந்த கிச்சா சுதீப், உபேந்திரா, நடிகை ரம்யா உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் கொல்லப்பட்ட ரேணுகா சுவாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்கிற ரீதியில் தர்ஷனுக்கு எதிராக கருத்து கூறியுள்ளனர். அதேசமயம் முன்னணி நடிகராக சிவராஜ்குமார் இதுபற்றி எந்த கருத்தும் இதுவரை கூறாமல் இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் கன்னட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிவராஜ்குமார் இந்த விவகாரம் பற்றி கூறும்போது இரண்டு குடும்பத்தினருமே பரிதாபத்திற்கு உரியவர்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார்.
மேலும், “இது போன்ற விஷயங்களில் விதி என்று ஒன்று எழுதப்பட்டுள்ளது. விதி விளையாடும்போது அதை மீறி நாம் ஒன்றும் செய்ய இயலாது. அதேசமயம் மற்றவர்களை பற்றி சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என்று ஒருவர் முதலில் நினைக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போது அது மற்றவர்களை காயப்படுத்தும். தற்போது இது குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் நாம் அனைவரும் அமைதியாக காத்திருப்போம்” என்று கூறியுள்ளார்.