பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா |
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட பின் அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் புகழ் வெளிச்சம் கிடைத்து வருகிறது. குறிப்பாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக துடிக்கும் சில இளைஞர்கள் இதை பயன்படுத்தி முன்னேற முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் தற்போது இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார்.
இதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தர்ஷன், முகேன், பாலாஜி முருகதாஸ், ஆரவ் போன்றவர்களும் சினிமாவில் கதாநாயகர்களாக அடியெடுத்து வைத்தனர். ஆனால் கிடைத்த வாய்ப்பை அவர்கள் பெரிய அளவில் தக்க வைக்கவில்லை. இதில் ஆரவ் மட்டுமே கலகத்தலைவன் படம் மூலமாக வில்லனாக நடித்து பாராட்டு பெற்று, தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 வின்னரான ராஜூ ஜெயமோகன் தற்போது பன் பட்டர் ஜாம் என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை இயக்குனர் ராகவ் மிர்தத் என்பவர் இயக்குகிறார். இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறதாம்.
குறிப்பாக நாகேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த எதிர்நீச்சல் படங்களின் பாணியில் இந்த படம் இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ராகவ். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் கவினுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராஜூ ஜெயமோகன். தற்போது கிடைத்துள்ள இந்தவாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.