'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
'டாக்டர்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டான்'. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா புரபசராக நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படமாக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆயுதப் பூஜையையொட்டி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக உள்ள ராஜூ ஜெயமோகன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே, 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்ற திரைப்படத்தில் கவினுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.