நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான படம் 'மகாராஜா'. இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில் இப்படம் 100 கோடி வசூலைப் பெற்றுவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் இதற்கு முன் வெளிவந்த படங்களில் 'அரண்மனை 4' படம் மட்டுமே ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. இரண்டாவது படமாக தற்போது 'மகாராஜா' கடந்துள்ளது. ஆனால், குறுகிய காலத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஆனால், அவர் கதாநாயகனாக நடித்த ஒரு படம் ரூ.100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. இந்தப் படத்தின் வெற்றி மூலம் தனது முந்தைய தோல்விகளை அவர் சரி செய்துள்ளார். அவர் நடித்து வெளிவர உள்ள அடுத்த படங்களுக்கான வியாபாரமும் சிறப்பாக நடக்க வழி செய்துவிட்டார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இப்படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளனர்.