மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மலையாள திரையுலகின் நடிகர் சங்கமான 'அம்மா' பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டிருந்த பவுன்சர்கள், கூட்டம் நடந்த அரங்கிற்குள் பத்திரிகையாளர்களை நுழைய விடாமல் தடுத்ததுடன், அவர்களை வெளியே கொட்டும் மழையில் காத்திருக்க வைத்தனர். இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட இந்த சங்கடத்திற்கு தற்போது புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சித்திக் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “அம்மா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது பத்திரிக்கையாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் விதமாக சில நிகழ்வுகள் நடந்தது. இதற்கு நானே முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னுடைய அஜாக்கிரதையால் தான் இது நடந்தது. சில சொந்த காரணங்களால் நான் அவசரமாக அந்த அரங்கை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. அதனாலேயே பத்திரிக்கையாளர்களுக்கு இந்த சங்கடம் நிகழ்ந்தது. அவர்களிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதுடன் எதிர்காலத்தில் இதுபோன்று ஒரு நிகழ்வு நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று உறுதியும் அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார் நடிகர் சித்திக்.