ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சமீப வருடங்களாகவே பிரபல ஹீரோக்கள் நடித்த ஹிட் படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் பிறந்தநாளிலோ அல்லது அந்த படத்தின் பத்தாவது, இருபதாவது வருட கொண்டாட்டமாகவோ டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் கில்லி திரைப்படம் கிட்டத்தட்ட 30 கோடி வரை வசூலித்தது. பல திரையரங்குகளில் ஒரு மாதத்தையும் தாண்டி ஓடியது. இதைத்தொடர்ந்து பல படங்கள் இதுபோன்று ரீ ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.
இங்கு தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் அவ்வப்போது சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மணிசித்திரதாழ் திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் 2000ல் வெளியான தேவதூதன் திரைப்படமும் இதேபோல 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த தகவலை நடிகர் மோகன்லாலே அதிகாரப்பூர்வமாக தற்போது தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சிபிமலயில் இயக்கத்தில் உருவாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை கடந்துள்ள இந்த படத்தை கவுரவிக்கும் விதமாக ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அமானுஷ்ய திரில்லராக இந்தப்படத்தில் ஜெயப்ரதா கதாநாயகியாக நடித்திருந்தார்.




