10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

சிவகார்த்திகேயன் நடித்த ‛வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' போன்ற படங்களை இயக்கியவர் பொன்ராம். இந்த படங்கள் காமெடிக்காக ஓடி, நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்தன. இந்த பாணியில் இருந்து சற்றே விலகி பெரிய பட்ஜெட்டில் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து சீமராஜாவை இயக்கினார் பொன்ராம். அந்த படம் ஓடவில்லை. அடுத்து அவர் இயக்கிய எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி படங்களும் ஹிட் ஆகவில்லை. இதனால், பொன்ராம் மார்க்கெட் சரிந்தது. விஜயகாந்த் மகனை வைத்து இவர் இயக்கிய கொம்பு சீவியும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய பொன்ராம், ‛‛நான் டிரைவராக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இயக்குனர் ஆனேன். என் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால், சில படங்களில் அது மிஸ்சிங். இனி, என் பழைய பாணியில் படங்களை இயக்குவேன். என் கதைகளில் காமெடிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
ஆனாலும், சிவகார்த்திகேயன் உட்பட முன்னணி ஹீரோக்கள் பொன்ராமுக்கு உடனே கால்ஷீட் கொடுக்க தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.




