கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
பெரும்பாலும் ஹீரோக்கள் நூறு படங்கள் என்கிற இலக்கை தொட்டு விடுவது போல இயக்குனர்கள் அவ்வளவு எளிதில் இந்த சாதனையை செய்ய முடிவதில்லை. தமிழில் கே.பாலச்சந்தர், ராமநாராயணன், தெலுங்கில் தாசரி நாராயணராவ் போன்ற வெகு சில இயக்குனர்களே 100 படங்களை இயக்கி சாதித்துள்ளனர். அந்த வகையில் மலையாள திரையுலகில் இயக்குனர் பிரியதர்ஷன் விரைவில் தனது நூறாவது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அவரது ஆஸ்தான ஹீரோவான மோகன்லால் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தமிழில் எஸ்.பி முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணி போல மலையாளத்தில் பிரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணி. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. மோகன்லால் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி வெளியாகாமலே போன திரநோட்டம் என்கிற படத்திற்கு பிரியதர்ஷன் தான் கதாசிரியராக பணியாற்றியிருந்தார். அதன்பிறகு இவர் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமான பூச்சைக்கொரு மூக்குத்தி படத்தில் மோகன்லால் தான் ஹீரோவாக நடித்திருந்தார்.
அப்போதிருந்து தொடங்கி கிட்டத்தட்ட 35 படங்களுக்கு மேல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரியதர்ஷன் இயக்கிய மரைக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்கிற வரலாற்றுப் படத்திலும் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் தான் பிரியதர்ஷினின் நூறாவது படம் என்கிற சாதனையிலும் தன்னை இணைத்துக் கொள்ள இருக்கிறார் மோகன்லால்.