மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
மலையாள திரையுலகில் 100 படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் கதாநாயகனாக நடித்த லூசிபர் என்கிற வெற்றி படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதை அடுத்து மீண்டும் மோகன்லாலை வைத்து, அவருடன் இணைந்து நடித்த ‛ப்ரோ டாடி' என்கிற இன்னொரு வெற்றி படத்தையும் இயக்கினார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான ‛எம்புரான்' படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி வருகிறார் பிரித்விராஜ். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன்லாலுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பிரித்விராஜ் கூறும்போது ஒரு ஆச்சரியமான தகவலை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது, “படப்பிடிப்பில் காட்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது நாங்கள் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அப்போது ஜாலியாக ஜோக் அடித்து சிரிப்போம். என்னை அவர் மோனே (மகனே) என்று தான் அழைத்து பேசுவார். ஆனால் ஷாட் ரெடி என கூறியதும் அவர் எழுந்து விட்டால் அதன் பிறகு என்னை சார் என்று மட்டும் தான் அழைப்பார். என் தந்தை மீது அவர் வைத்துள்ள நட்பின் உரிமையில் என்னை அவர் நடத்தும் விதமும் அதேசமயம் ஒரு இயக்குனராக அவர் எனக்கு அளிக்கும் மரியாதையும் என ஒரே நேரத்தில் இருவிதமாக என்னை ஆச்சரியப்படுத்துகிறார் லாலேட்டன் (மோகன்லால்)” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.