குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
நடிகர் பஹத் பாஸில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தன்னை பற்றி எப்போதும் பேச வைத்துக் கொண்டே இருக்கிறார். அப்படி சமீபத்தில் மலையாளத்தில் அவர் கதாநாயகனாக நடித்த ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அவர் ரங்கா என்கிற காமெடி கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளார். படத்தையும் தாண்டி இவரது கதாபாத்திரம் குறித்து தான் பலரும் சிலாகித்து பேசி வருகின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பஹத் பாசில் கூறும்போது, “நான் சாதாரணமாக வெளியே செல்வதற்கு யோசிப்பதில்லை. இப்போதும் கூட திடீரென வீட்டில் பால் இல்லாவிட்டாலோ அல்லது எனக்கு தேவையானது இல்லா விட்டாலோ அருகில் உள்ள கடைக்குச் சென்று நான்தான் வாங்கி வருகிறேன். அப்போது ரசிகர்கள் யாரும் ஓடிவந்து என்னை மொய்த்து கொள்வதில்லை. அதே சமயம் என்னை பார்த்து பலர் புன்னகைப்பார்கள். சிலர் செல்பி எடுக்க மொபைல் போன்களை தூக்குவார்கள். அதை பார்த்ததும் அங்கிருந்து உடனடியாக ஓடி வந்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.