விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
மலையாள திரையுலகை பொறுத்தவரை ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூட மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அப்படி ஏதேனும் கட்டாய தேவை இருந்தால் மட்டுமே இரண்டாம் பாகம் பற்றி யோசிப்பார்கள் (சிபிஐ பாகங்கள் போல). அதனால் மலையாளத்தில் இரண்டாம் பாக படங்கள் வெளியாவது ரொம்பவே குறைவு. இந்த நிலையில் தான் 'ஆடு' என்கிற படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் கடந்த 2015ல் 'ஆடு' படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தை மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கியிருந்தார். இவர் தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சீரியல் கொலையை மையப்படுத்தி வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'அஞ்சாம் பாதிரா' என்கிற படத்தை இயக்கியவர். அதைத் தொடர்ந்து 2017ல் ஆடு படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டானது.
தற்போது ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதே கூட்டணியில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த மூன்று பாகங்களின் தயாரிப்பாளர், மலையாள நடிகர் விஜய் பாபு தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகை பலாத்கார வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.