ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் |
மலையாளத்தில் சிறந்த பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட். மலையாளத்தில் உருவாகி தமிழில் வெளியான '4 ஸ்டூடண்ட்ஸ்' என்கிற படத்தில் பரத், கோபிகா அதிரடியாக ஆடிப்பாடும் லஜ்ஜாவதியே மற்றும் அன்னக்கிளி நீ வாடி ஆகிய ஹிட் பாடல்களை இசையமைத்தது இவர்தான். இப்போதும் மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களுக்கு இசை அமைத்து வரும் இவர் வெளியிடங்களில் பல இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கேரளாவில் உள்ள கொளஞ்சேரி என்கிற பகுதியில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் இவர் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக கலந்து கொண்டார்.
அப்படி அவர் நிகழ்ச்சி நடத்திய போது திடீரென கல்லூரி முதல்வர் மேடை ஏறி அவரிடம் இருந்து பாதியிலேயே மைக்கை பிடுங்கிக்கொண்டு அவரை இறங்கி போக சொல்லி இருக்கிறார். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜாஸி கிப்ட் கூறும்போது, “நான் பெர்பார்மென்ஸ் பண்ணும்போது என்னுடன் என்னுடைய இசைக்குழுவும் மேடை ஏறி வந்தார்கள். அதை கல்லூரி முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இசை நிகழ்ச்சி நடக்கும்போது இசையமைப்பாளருடன் அவரது குழுவும் மேடையில் பங்கு பெறுவார்கள் என்பதைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது போன்ற சம்பவம் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் நடக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.