50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் |
மலையாள நடிகர் பிரித்விராஜ் தற்போது முன்னணி நடிகராக மட்டுமல்ல, ஒரு வெற்றிகரமான இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வருகிறார். மறைந்த நடிகர் சுகுமாரன் மற்றும் நடிகை மல்லிகா தம்பதியினரின் இளைய வாரிசு தான் பிரித்விராஜ். இவரது அண்ணன் இந்திரஜித்தும் நடிகராக இருக்கிறார். இந்த நிலையில் பிரித்விராஜின் அம்மா தனது 50வது வருட திரையுலக பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதற்காக சமீபத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் பிரித்விராஜ் பேசும்போது, “எனது தந்தை இறந்த சமயத்தில் நானும் என் அண்ணனும் என் அம்மா என்ன செய்யப் போகிறாரோ என்று தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாங்கள் இந்த இடத்தில் இருக்கிறோம் என்றால் அதுதான் எங்கள் அம்மா தனி ஆளாக நின்று சாதித்தது. சினிமாவில் 50 வருட பயணத்தை தொட்டுள்ளார். இடையில் சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இப்போது முழுமூச்சுடன் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல எனது அம்மாவுடன் நடித்தது, ஒரு டைரக்டராக அவரை இயக்கியது, ஒரு தயாரிப்பாளராக அவருடைய படத்தை தயாரித்தது என வேறு எந்த ஒருவருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு மட்டுமே கிடைத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.