அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகராக வலம் வருபவர் சுரேஷ் கோபி. தமிழில் விஜயகாந்த் போல, மலையாளத்தில் ஆக்ஷன் ஹீரோ என பெயர் பெற்ற இவர் கடந்த சில வருடங்களாக குறைந்த அளவிலேயே படங்களில் நடித்து வருகிறார். காரணம் பா.ஜ., கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்.பியாகவும் பொறுப்பு வைத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி தலைமையில் சுரேஷ் கோபியின் மூத்த மகள் பாக்யாவுக்கும் ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனது மகளின் திருமணத்திற்கு ஏற்கனவே கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு சுரேஷ்கோபி அழைப்பு விடுத்திருந்த நிலையில் மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது சுரேஷ் கோபியின் வீட்டிற்கே வந்து மீண்டும் மணமக்களை வாழ்த்தியுள்ளார். சுரேஷ் கோபியும் கவர்னருக்கு சிறப்பான விருந்தோம்பல் செய்து அவரை கவுரவித்தார். கடந்த சில தினங்களாக கேரளாவில் ஆளும் அரசுடன் எதிர்ப்பு போக்கை கடைபிடித்து வரும் கவர்னர், மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுரேஷ்கோபியின் வீட்டிற்கே வந்து சென்றுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.