'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் நாளை (ஜனவரி 25) வெளியாக உள்ள படம் மலைக்கோட்டை வாலிபன். தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் சேர்த்து பான் இந்திய படமாக இது வெளியாகிறது. பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் மல்யுத்த விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில் மோகன்லால் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற நடிகர் யோகி பாபு தனது வாழ்த்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
யோகி பாபுவும் தற்போது மலையாளத்தில் நுழைந்து 'குருவாயூர் அம்பலநடையில்' என்கிற படத்தில் பிரித்விராஜூடன் இணைந்து நடித்து வருகிறார். மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கும் யோகிபாபுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் ஜெயிலர் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் யோகிபாபு.
மலைக்கோட்டை வாலிபன் பட போஸ்டர் அருகில் மோகன்லால் நிற்பது போன்ற புகைப்படத்தை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டு வெளியிட்டுள்ள பதிவில் "மலைக்கோட்டை வாலிபன் ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது, ஆல் தி பெஸ்ட் மோகன்லால் சார்.. வாழ்த்துக்கள் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.. இந்த அற்புதமான திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள். மலைக்கோட்டை வாலிபன் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று குறிப்பிட்டுள்ளார் யோகிபாபு.