திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஈகிள். அனுபமா பரமேஸ்வரன், காவ்யா தப்பார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். பீப்புள் மீடியா பேக்டரி சார்பில் இந்த படத்தை டி.ஜி விஸ்வபிரசாத் தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக ரிலீஸாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ், நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீஸானதால் அத்தனை படங்களுக்கும் தியேட்டர்களை ஒதுக்குவதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் தெலுங்கு பிலிம் சேம்பர் இதில் தலையிட்டு யாராவது ஒருவர் இந்த போட்டியில் இருந்து விலகிக் கொண்டால் அவர்களுக்கு பின்வரும் நாளில் சோலோவாக ரிலீஸ் ஆகும் விதமாக உதவி செய்கிறோம் என்று அறிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு ரவி தேஜாவின் ஈகிள் படம் இந்த போட்டியில் இருந்து பின்வாங்கியது. தற்போது பிப்ரவரி 9ஆம் தேதி ஈகிள் படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளனர்.
ஆனால் அதே தேதியில் தான் ஜீவா, மம்முட்டி நடித்துள்ள யாத்ரா-2, சந்தீப் கிஷன் நடித்துள்ள ஊரு பேரு பைரவகோனா மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் லால் சலாம் படத்தின் தெலுங்கு வெர்ஷன் என மூன்று படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஈகிள் படத்தின் தயாரிப்பாளர், தெலுங்கு பிலிம் சேம்பர் தங்களுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி சோலோ ரிலீஸாக தங்கள் படம் வெளியாக வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். தெலுங்கு பிலிம் சேம்பர் நிஜமாகவே கொடுத்த வாக்குறுதியா, இல்லை சங்கராந்தி ரிலீஸை சமாளிப்பதற்காக செய்த யுக்தியா என்பது ஈகிள் படம் ரிலீசின் போது தெரிந்து விடும்.