ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நேர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்தை அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் மோகன்லால் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். மல்யுத்த போட்டியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.
வரும் ஜனவரி 25ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டதாகவும் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி ஏழு நிமிடங்கள் என்றும் சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகின. தற்போது பட தயாரிப்பு நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இன்னும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் சென்சாருக்காக அனுப்பப்படவில்லை என்றும் படம் ரிலீஸ் ஆகும் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பாக தான் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அது மட்டுமல்ல படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 37 நிமிடம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.




