லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாளத்தில் இளம் இயக்குனர்களில் அதிக அளவில் ரசிகர்களை கவரும் விதமாக படங்களை இயக்கி வருபவர் வினீத் சீனிவாசன். இவரும் ஒரு நடிகராக மாறி பிஸியாக நடித்து வந்தாலும் சீரான இடைவெளியில் படங்களையும் இயக்கி வருகிறார். கடந்த வருடம் மோகன்லால் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் ஹிருதயம் என்கிற படத்தை இயக்கியிருந்தார் வினித் சீனிவாசன் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பிரணவ், கல்யாணி நடிப்பில் 'வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கு முன்பு வினீத் சீனிவாசன் படம் இயக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து அவரது படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்தவர் நிவின்பாலி. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வினீத் சீனிவாசன் டைரக்ஷனில் அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் பிரணவ், நிவின்பாலி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.