ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

அறிமுக இயக்குனர் சவுர்யா இயக்கத்தில் நடிகர் நானி, நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள படம் 'ஹாய் நான்னா'. ஹேசம் அப்துல் இசையமைக்கும் இப்படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அப்பா - மகள் உறவை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த படம் அனைத்து வயதினருக்கான படம் என்பதால் தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும், இப்படம் 2 மணி நேரம் 34 நிமிடம் நீளம் கொண்டதாக உருவாகியுள்ளது. இந்தவாரம் டிசம்பர் 7ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.




