எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு |
கடந்த 2014ல் மலையாளத்தில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா, பார்வதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகி வெற்றியை பெற்ற படம் பெங்களூர் டேஸ். அஞ்சலி மேனன் இந்தப்படத்தை இயக்கினார். இந்த படம் பின்னர் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் துல்கர் சல்மான் ஒரு பைக் ரேஸராக நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் துல்கர் பங்குபெறும் ஒரு பைக் ரேஸ் காட்சி இடம் பெற்றிருந்தது. படத்தில் இந்த காட்சி மிகவும் விறுவிறுப்பாக காட்டப்பட்டிருந்தது.
இந்தப்படம் வெளியாகி 10 வருடம் ஆகும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த பைக் ரேஸ் காட்சி எடுக்கப்பட்ட விதம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் அஞ்சலி மேனன்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “புனேயில் நடைபெறும் இந்த சகதி பைக் ரேஸ் காட்சி போன்று கேரளாவில் செட் போட்டு எடுப்பதற்கு எங்களுக்கு பட்ஜெட் ஒத்துழைக்கவில்லை. அதனால் நாங்கள் நேரடியாக புனே சென்று பைக் ரேஸ் காட்சிகளை படமாக்க அனுமதி கேட்டோம். குறிப்பாக அப்போதைய நேஷனல் சாம்பியன் ஆக இருந்த கேபி அரவிந்த் என்பவரிடமும் இது குறித்து பேசினோம். ஆரம்பத்தில் அவர் ஒப்புக்கொண்டார். அன்றைய தினம் அவர் இரண்டு பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. முதல் பந்தயத்தில் அவர் தோற்றுவிட்டார்.
அந்த சமயத்தில் அடுத்த பைக் ரேஸ் காட்சிகளை படமாக்க முயற்சித்த எங்களது ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட குழுவினரை வெளியேறுமாறு நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். அதன்பிறகு நடைபெற்ற இரண்டாவது ரேஸில் கேபி அரவிந்த் வெற்றி பெற்றார். அந்த உற்சாகத்தில், அவர் தான் வென்ற மற்றும் தோற்ற இரண்டு பந்தயங்களின் வீடியோ காட்சிகளையும் எங்களிடம் கொடுத்து அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். அதன்பிறகு எங்களது கலை இயக்குனர்களை வைத்து துல்கர் சல்மான் பைக் ஓட்டுவது போன்று தத்ரூபமாக சில காட்சிகளை வடிவமைத்து நிஜமான பந்தய காட்சிகளுடன் இணைத்து விட்டோம்” என்று கூறியுள்ளார்.