ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு இணையான நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. ஆக்ஷன் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி தனக்கென தனி ரசிகர்களை பெற்ற இவர் ஒரு கட்டத்தில் அரசியலிலும் கால் வைத்தார். அதனால் சினிமாவில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் படங்களை பிஸியாக நடித்து வருகிறார். இவரது வாரிசுகளை பொருத்தவரை இரண்டு மகன்களில் மூத்தவரான கோகுல் சுரேஷ் தற்போது மலையாளத்தில் கதாநாயகனாகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இளைய மகன் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
இரண்டு மகள்களில் மூத்தவரான பாக்யாவுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மாவேலிக்கரையை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரேயாஸ் மோகன் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் பாக்யா. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் உள்ள சுரேஷ் கோபியின் இல்லத்தில் நடைபெற்றது. திருமணம் வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து ஜனவரி 20ல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார் சுரேஷ் கோபி. பாக்யா சமீபத்தில் தான் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.