காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனராகவும் மாறிய பிரித்விராஜ், இன்னொரு பக்கம் பிரித்விராஜ் புரொடக்சன் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய்யின் மாஸ்டர், கேஜிஎப் 2, காந்தாரா என மிகப் பெரிய படங்களை கேரளாவில் இவரது நிறுவனம் தான் வெளியிட்டது. மேலும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்தும் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பிரித்விராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்திய மத்திய நிதி அமைச்சகம் பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனம் கடந்த 2022-2023க்கான ஜிஎஸ்டி வருமான வரி கணக்குகளை எந்தவித குறைபாடும் இல்லாமல் தாக்கல் செய்துள்ளதாக தற்போது பாராட்டு சான்றிதழ் ஒன்றை வழங்கியுள்ளது.