போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கேரளாவில் ஒரு படம் தியேட்டரில் வெளியானால் 42 நாட்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன்படி தான் கடந்த சில வருடங்களாக ஓடிடியில் மலையாளப் படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் ஜூட் அந்தோணி இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், கலையரசன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த '2018' படம் வெளியானது. இந்தப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. படம் தியேட்டரில் வெளியாகி 33 நாட்கள் ஆன நிலையில் இன்று முதல் ஓடிடியிலும் வெளியாகிறது. இதைக் கண்டித்து இன்றும், நாளையும் கேரளாவில் தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்றும், நாளையும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
“2018 படம் பல வருடங்களுக்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. ஓடிடியில் 42 நாட்களுக்கு பிறகு வெளியிட்டால் மிக குறைந்த தொகையே கிடைக்கும். இப்போது கொடுத்தால் பெரும் தொகை கிடைக்கும். அப்படியென்றால்தான் தயாரிப்பாளர் லாபம் பெற முடியும். தியேட்டர் அதிபர்களின் நலனைப்போலவே தயாரிப்பாளரின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று படத்தின் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது