ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கில் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜாதி ரத்னாலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமான நவீன் பாலி ஷெட்டி நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் நேற்று ஸ்ரீநிதி என்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசரில் ரவளி என்ற சமையல்காரரும், சித்து என்ற நகைச்சுவை நடிகரும் சந்தித்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதில் ரவளியாக அனுஷ்காவும், சித்துவாக நவின் பாலி ஷெட்டியும் நடித்துள்ளார்கள். யூ.வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பி.மகேஷ்பாபு இயக்குகிறார். நகைச்சுவை கலந்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.