ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த 2021ல் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் குறூப். கேரளாவில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு தான் இறந்ததாக நாடகமாடி, அதற்கான இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மோசடி செய்யும் முயற்சியில் தன்னைப்போன்ற தோற்றம் கொண்ட வேறு ஒரு நபரை கொலை செய்து பின்னர் அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலை மறைவானதாக சொல்லப்பட்ட சுகுமாரன் குறூப் என்கிற ஒரு குற்றவாளியின் கதையை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
துல்கர் சல்மானை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான சமயத்திலேயே சுகுமார குரூப்பின் பெயரை கெடுக்கும் விதமாக இந்த படத்தை அவரது வாழ்க்கையை வைத்து படமாக்கி உள்ளார்கள் என்று கூறி இந்த படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் இந்த படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து படம் வெளியானது. இந்த நிலையில் அந்த வழக்கு குறித்த மேல் விசாரணை தற்போது மீண்டும் கேரள உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது இது குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்த படத்தில் எங்கேயும் சுகுமார குறூப் பற்றிய வாழ்க்கை வரலாறு பயன்படுத்தியதாக எதிர் தரப்பினர் நிரூபிக்கவில்லை. அது மட்டுமல்ல குற்றம் சாட்டப்பட்ட, குற்றவாளி என நிரூபணமான சுகுமார குறூப் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களிலும் நீதிமன்ற தீர்ப்புகளிலும் வெளியான ஒன்றுதான்.. பொதுவெளியில் வெளியான அந்த தகவல்களின் அடிப்படையில் தாங்களாகவே ஒரு புதிய கதையை உருவாக்கி படம் இயக்குவதற்கு யாரும் தடை போட முடியாது. அது மட்டுமல்ல இது போன்ற பிரச்சனைகள் எல்லாவற்றையும் அலசித்தான் சென்சார் போர்டு இந்த படத்தை வெளியிடுவதற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்பிறகு இப்படி குற்றம் சாட்டி இருப்பது உள்நோக்கம் கொண்டது என்று கூறி இந்த வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.