தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் மோகன்லால், தனது நீண்ட நாள் கனவான டைரக்ஷன் ஆசையையும் நிறைவேற்றும் விதமாக தற்போது பாரோஸ் என்கிற படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியில் 3-டி யில் உருவாகி வரும் இந்த படத்தில் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்துவைத்த சொத்துக்களை பாதுகாக்கும் ‛பாரோஸ்' என்கிற பாதுகாவலன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் நடத்திவரும் கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரி மாணவன் லிடியன் நாதஸ்வரம் என்கிற பதினாறு வயது சிறுவனை இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்கிறார் மோகன்லால்.
இந்தநிலையில் ஐ இன் தி ஸ்கை, ஸ்கை டீப் ப்ளூ சீ-3, பிட்ஸ் பர்பெக்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த பிரபல ஹாலிவுட் இசை அமைப்பாளர் மார்க் கிலியன் தற்போது இந்த படத்தில் இணைத்துள்ளார். இது குறித்த தகவலை தற்போது மோகன்லாலே வெளியிட்டுள்ளார். ஏற்கனவே லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கும் நிலையில் அவர் பாடல்களுக்கு இசையமைப்பாளர் என்றும், தற்போது இணைந்துள்ள மார்க் கிலியன் இந்த படத்தில் பின்னணி இசைக்காக பொறுப்பேற்றுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.