ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மாண்டியா : குடியரசு தினத்தை அவமதித்ததாக நடிகை ரச்சிதா ராம் மீது மத்துார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் தர்ஷன், ரவிசந்திரன், நடிகை ரச்சிதா ராம் ஆகியோர் நடித்த கிராந்தி திரைப்படம், வரும் 26ம் தேதி குடியரசு தினம் அன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய அவர், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை மறந்து விடுங்கள். 'கிராந்தி' யோத்வசாவை கொண்டாடுங்கள்' என பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கர்நாடக மாநில அறிவியல் அராய்ச்சி கவுன்சில் தலைவர் சிவலிங்கய்யா, மத்துார் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில், 'இந்தியா சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகிறது. நம் நாட்டின் அரசியல் சாசனம் ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ரச்சிதா ராம், 'குடியரசு தினத்தை மறந்துவிட்டு, 'கிராந்தி'யை கொண்டாட வேண்டும்' என, பேசியுள்ளார். அரசியல் அமைப்புக்கு எதிரான வெளிப்படையான அறிக்கையானது, அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை அவமதிக்கும் செயலாகும். எனவே, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து, அவரை நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.




