இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
படிப்பதற்கு ஆர்வம் இருந்தால் வயது ஒரு தடை இல்லை என நிரூபித்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த குணச்சித்திர நடிகை லீனா ஆண்டனி. மலையாளத்தில் பஹத் பாஸில் நடிப்பில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் நாயகி அபர்ணா பாலமுரளியின் அம்மாவாக நடித்திருந்தவர் தான் இந்த லீனா ஆண்டனி. குணச்சித்திர நடிகையான இவரது கணவரும் நாடக நடிகர் தான். கணவரின் மனைவிக்கு பிறகு மகனும் மருமகளும் கொடுத்த ஊக்கத்தில் பாதியிலேயே நிறுத்தி இருந்த படிப்பை தொடரும் விதமாக பத்தாம் வகுப்பிற்கு தேர்வு எழுதினார் லீனா ஆண்டனி.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் தேர்வு எழுதிய செய்தி ரொம்பவே வைரலானது. ஆனாலும் இரண்டு முறை தொடர்ந்து எழுதியும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளார் லீனா ஆண்டனி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக பிளஸ் ஒன் படிக்கும் எண்ணத்திலும் இருக்கிறார். இவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது குறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி லீனாவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.