ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் விஜய் முதல்முறையாக தெலுங்கில் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை தயாரித்து உள்ளவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு. சில நாட்களுக்கு முன்பு துணிவு படத்தை விட வாரிசு படத்திற்கு தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் ஒதுக்க வேண்டும் என இவர் தெரிவித்த கருத்தும், விஜய் தான் நம்பர் ஒன் என்று இவர் கூறியதும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கேட்டு வற்புறுத்துகிறார் என்பதாலும் இவர் மீது தெலுங்கு திரை உலகிலும் பலர் வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தில் ராஜு, இதுவரை நான் தெலுங்கில் பல ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால் ஒருவர் கூட எனக்கு ஒரு கப் காபி கொடுத்தது கிடையாது. ஆனால் விஜய்யை சந்திக்க சென்றபோது அவர் தனது கைகளில் இரண்டு காபி கோப்பைகளுடன் வந்து அதில் எனக்கு ஒன்றை தந்து உபசரித்தார். அதனால் தான் அவர் சினிமாவிலும் சினிமாவை தாண்டியும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று பாராட்டியுள்ளார். இவர் விஜய்யை உயர்த்தி பேசுவதற்காக ஒரு மிகப்பெரிய விழா மேடையில் இப்படி தெலுங்கு நடிகர்களை குறை சொல்லி இருப்பது மீண்டும் தெலுங்கு திரை உலகை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.