இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி நேற்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களை கடந்துவிட்ட மம்முட்டி, தற்போதும் முன்னணி நடிகராகவே வலம் வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் மம்முட்டியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.
நள்ளிரவில் மம்முட்டி எங்களுக்கு தரிசனம் தருவார் என அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும் ரசிகர்களின் அன்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்நேரத்தில் பால்கனிக்கு வந்த மம்முட்டி அவர்களை பார்த்து கையசைத்து வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் அங்கேயே கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடியதுடன் வான வெடிகளையும் எடுத்து வெடித்து, அமர்க்களம்ப்படுத்தினர். இப்படி தனது பிறந்தநாளன்று நள்ளிரவில் ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட ஒரே நடிகர் மம்முட்டியாகத்தான் இருக்கும்.