மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் |
கடந்த இரண்டு வருடங்களாக மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த படங்கள் வரிசையாக ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாகி வந்தன. அதில் சில படங்கள் வெற்றி, சில படங்கள் ஆவரேஜ் என்கிற வரவேற்பை பெற்றன. இந்தநிலையில் கடந்த மாதம் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்த கடுவா திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. பக்கா ஆக்சன் படமாக உருவாகியிருந்த இந்த படத்திற்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன் ரூ.50 கோடி வசூல் கிளப்பிலும் இந்த படம் இணைந்தது.
அதனால் நேற்று பிரித்விராஜ் நடிப்பில் வெளியான தீர்ப்பு படத்திற்கும் அதே அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதுவரை பிரித்விராஜின் படங்கள் முதல் நாள் வசூலாக குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு மேலும் அதிகபட்சமாக 2 கோடி வரையிலும் வசூலித்து வந்த நிலையில் தீர்ப்பு திரைப்படம் வெறும் 40 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பது திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தனைக்கும் பிரித்விராஜின் கடுவா பட வெற்றி கொடுத்த எதிர்பார்ப்பில் எப்படியும் முதல் நாள் வசூல் ஒரு கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்ட நிலையில் படம் திருப்திகரமாக இல்லை என வெளியான விமர்சனங்களால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு வரவேற்பு குறைந்து வசூல் பாதிக்கப்பட்டதாக தியேட்டர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
இத்தனைக்கும் மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கிய லூசிபர் என்கிற ஹிட் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியரும், நடிகருமான முரளிகோபி தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். நடிகர் சித்தார்த் மலையாளத்தில் முதன்முதலாக நுழைந்து திலீப்புடன் இணைந்து நடித்த கம்மர சம்பவம் என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். லூசிபர் படத்தில் வொர்க் அவுட் ஆன முரளி கோபியின் கதை, தீர்ப்பு படத்திற்கு சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.