ரோபோ சங்கர் உடலுக்கு கமல் அஞ்சலி | பிளாஷ்பேக்: அமரத்துவம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் “அமரகவி” | டிரஸ் வாங்க பணமின்றி புரமோஷனுக்கு படப்பிடிப்பு உடைகளையே அணிந்த விஜய் தேவரகொண்டா | திரிஷ்யம் 3 ரிலீஸ் முதலில் மலையாளத்தில்.. பிறகுதான் ஹிந்தியில் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | உன்னி முகுந்தன் விலகிய நிலையில் மார்கோ 2ம் பாக டைட்டில் அறிவிப்பு | மீண்டும் வெளியாகும் அவதார் வே ஆப் வாட்டர் | பிளாஷ்பேக் : தோல்வி அடைந்த 3டி படம் | பிளாஷ்பேக்: ஆர்.எஸ்.மனோகர் நாயகனாக நடித்த லக்ஷ்மி | பாகுபலி பாணியில் உருவாகி இருக்கும் மோகன்லாலின் விருஷபா | ரோபோ சங்கர் மறைவு : அரசியல் தலைவர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் இரங்கல் |
கொரோனாவின் இரண்டு அலைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு மறைந்த நிலையில், இந்த வருடம் துவக்கத்திலிருந்து மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதன் பாதிப்பிற்கு சில திரையுலக பிரபலங்களும் ஆளாகியுள்ளனர். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.
கடந்த வருடம் தான் கொரோனா தொற்றால் முதல்முறையாக பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணா அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது அவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இரண்டாவது முறையாக' கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது தரப்பில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கோவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறு பாலகிருஷ்ணா கேட்டுக்கொண்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரசிகர்களும் தெலுங்கு திரையுலக பிரபலங்களும் பாலகிருஷ்ணா விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.