துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் என்கிற வரலாற்றுப் படம் வெளியானது. மிகப்பெரிய பொருட்செலவில் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான இந்த படம் மிகவும் காலதாமதமாக வெளியானதாலோ என்னவோ ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தவறியது.
இன்னொரு பக்கம் பிரியதர்ஷன் இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் இயக்கியுள்ள ஹங்கமா 2 திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்தநிலையில் பிரியதர்ஷன் தற்போது தனது புதிய படத்திற்கு தயாராகி வருகிறார். இதில் வளர்ந்து வரும் மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். பீஸ்ட் படத்தில் நடித்த ஷைன் டாம் சாக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த ஷேன் நிகம் தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெயில் என்கிற படத்தில் நடித்த போது அதன் தயாரிப்பாளருடன் சம்பளப் பிரச்சினைக்காக முரண்பட்டு பின்னர் தயாரிப்பாளரை கோபப்படுத்தும் விதமாக முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்திற்காக தான் நீளமாக வளர்த்திருந்த தலை முடியை குட்டையாக வெட்டிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பிறகு இவருக்கு ரெட் கார்டு போடும் அளவுக்கு நிலைமை சென்று பின்னர் தயாரிப்பாளரிடம் வருத்தம் தெரிவித்து அந்த படத்தை முடித்துக் கொடுத்தார்.
இதற்கிடையே விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இவர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரியதர்ஷன் படத்தில் நடிப்பதன் மூலம் திரையுலகில் தனது அடுத்த கட்டத்தை நோக்கி ஷேன் நிகம் நகர்கிறார் என்று சொல்லலாம்.