ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
மலையாள திரையுலகில் எவர்கிரீன் சாக்லேட் ஹீரோ என ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரபலங்களாலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன். இவர் கதாநாயகனாக அறிமுகமானது பாசில் இயக்கத்தில் 1997 வெளியான அனியத்தி பிறா என்கிற படத்தின் மூலம் தான். அந்தப்படம் வெளியாகி இன்றோடு சரியாக 25 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் இதை உற்சாகமாக கொண்டாடி வரும் வேளையில் குஞ்சாக்கோ போபனுக்கு இன்னொரு சந்தோசமான கிப்ட் ஒன்று கிடைத்துள்ளது.
அனியத்தி பிறா படத்தில் அவர் கல்லூரி சென்று வருவதற்காகவும் காதலிப்பதாகவும் பயன்படுத்திய ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் வாகனத்தை தேடிப்பிடித்து தற்போது தனக்கு சொந்தமாக்கி உள்ளார் குஞ்சாக்கோ போபன். அந்த படம் வெளியான பின்னர் அதுபோன்ற சிவப்பு நிற ஸ்ப்ளெண்டர் பைக்கில் சுற்றும் மோகம் கல்லூரி இளைஞர்களிடம் அதிகரித்தது..
ஆலப்புழாவில் உள்ள ஹோண்டா பைக் ஷோரூமில் வேலை பார்க்கும் போனி என்பவர்தான் அந்த ஸ்ப்ளெண்டர் பைக்கை இத்தனை நாட்களாக தன்னிடம் வைத்து பராமரித்து வந்தார். இந்த தகவலை கேள்விப்பட்டு தற்போது அந்த பைக்கை வாங்கி தனக்கு சொந்தமாக்கி உள்ள குஞ்சாக்கோ போபன் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார்.