ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும் முறை அதிகமானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக நூற்றுக்கணக்கான படங்கள் அப்படி வெளியாகியுள்ளது.
நேரடியாக வெளியாகும் படங்கள் படைக்கும் சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், தியேட்டர்களில் வெளியான பின் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் சாதனைகளைப் படைக்கிறது. அந்த வகையில் பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படமான 'அகான்டா' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.
படம் வெளியான 24 மணி நேரங்களில் டிஜிட்டல் தளங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற படம் என்ற சாதனையை 'அகான்டா' படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர் வெளியீட்டிலும் 100 கோடி வசூலைப் பெற்ற இப்படம் ஓடிடியிலும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இப்படம் ஸ்டார் மா டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. அப்போது டிவி ரேட்டிங்கிலும் இப்படம் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.