ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கேரள மாநிலம் கோட்டையத்தில் பிறந்தவர் பாபு நம்பூதிரி. கல்லூரி பேராசிரியாக பணியாற்றினார். கல்லூரி நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் வெளி நாடகங்களிலும் நடித்தார். அப்படியே சினிமாவுக்கும் வந்து விட்டார். கடந்த 40 வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 215க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மம்முட்டியின் 'நிறக்கூட்டு', மோகன்லாலில் தூவானதும்பிகள், நிறக்கூட்டு, ஜாக்ரதா, பெருதச்சன், கேரள கபே அவர் நடித்த முக்கியமான படங்கள்.
74 வயதான பாபு நம்பூரி தற்போது சினிமாவில் இருந்து விலகி கோட்டயம் குரவிலங்காடு பகுதியிலுள்ள கணபதி கோயிலில் பூசாரியாகவும் பணியாற்றுகிறார். பல ஆண்டுகளாக வோவிலின் வராதபோது, பூசாரி பொறுப்பை ஏற்று நடத்திய பாபு நம்பூதிரி இப்போது முழுநேர பூசாரி ஆகிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் குடும்பமே இறைவனுக்கு சேவை செய்யும் நம்பூதிரி குடும்பம். நான் பள்ளியில் படிக்கும்போதே பூஜைகள் பற்றி தெரிந்துகொண்டேன். நம்பூதிரி சமூகத்தில் இப்போது சிலருக்கு பூஜைகள் செய்ய தெரிகிறது. ஆனால், அடுத்த தலைமுறைக்கு இதில் விருப்பம் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. என்கிறார்.




