ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், சுகாசினி உள்பட பலர் நடித்துள்ள படம் மரக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி யுள்ள இப்படம் டிசம்பர் 2-ந்தேதியான நாளை தியேட்டரில் வெளியாகிறது. தமிழில் இப் படத்தை அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய மோகன்லால், இந்த அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை தயாரித்து முடிப்பது தயாரிப்பா ளருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதோடு இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனபோதிலும் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஒப்பந்தம் போட்டிருப்பதாக ஊடகங்களில் தவறான செய்தி பரவியது. அப்படி ஒப்பந்தமாகி யிருந்தால் இப்போது படத்தை தியேட்டரில் வெளியிட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இருப்பினும், தியேட்டர்களில் ஓடி முடித்ததும் அரபிக்கடலின்டே சிம் ஹம் படமும் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் மோகன்லால்.