36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் |
மலையாளத்தில் வெளியான ஒரே படத்தில், அதுவும் ஒரே பாடலில் தனது புருவ சிமிட்டல்கள் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து புருவ அழகி என அழைக்கப்படும் அளவுக்கு ஓவர் நைட்டில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.. அதன்பிறகு இவருக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என படவாய்ப்புகள் ஓரளவுக்கு தேடிவந்தன.
அதேசமயம் சோசியல் மீடியா பக்கத்திலும் ரொம்பவே ஆக்டிவாக இருந்துவருகிறார் பிரியா பிரகாஷ் வாரியர், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கின்றனர். அதனால் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார் பிரியா வாரியர்,
ஆனால் இதற்கு அப்படியே நேர்மாறாக தற்போது புடவை கட்டி காதருகில் ரோஜாப்பூ ஒன்றை வைத்து மஹாராஷ்டிரா மாநிலத்து கிராமத்துப்பெண் போல வயல்வெளியின் பின்னணியில் ஒரு சில புகைப்படங்களை எடுத்து அவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் பிரியா வாரியார். அவரது கவர்ச்சிகரமான புகைப்படங்களுக்கு கிடைப்பது போன்றே இந்த புகைப்படங்களும் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வருகின்றன..