‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் குருப் என்கிற திரைப்படம் வெளியானது. எண்பதுகளில் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்ட குருப் என்கிற குற்றவாளியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தான் இறந்து விட்டதாக நாடகமாடி தனது இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கேரளாவை சேர்ந்த சாக்கோ என்கிற இளைஞனை கொலை செய்த குற்றத்திற்காக, தற்போதும் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் குரூப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
அதேசமயம் கொலை செய்யப்பட்ட சாக்கோ கதாபாத்திரத்தை சார்லி என்கிற பெயரில் நடிகர் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். அவரது மனைவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவர்கள் இருவருமே படத்தில் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான காட்சியிலேயே நடித்திருந்தனர்.
இப்படி இவர்கள் இருவரும் நட்புக்காக தனது படத்தில் நடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் தனித்தனி போஸ்டர் வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான். முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் டொவினோ தாமஸ் மற்றும் அனுபமா இருவருமே இன்னொரு முன்னணி நடிகரின் படத்தில் இப்படி சில நிமிடம் வந்து போகும் கெஸ்ட் ரோலில் எடுத்திருக்கிறார்கள் என்றால் ஒரு பெரிய மனது வேண்டும்.




