தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பாலிவுட்டின் வசூல் நாயகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். அவர் நடித்த 'பெல்பாட்டம்' படம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா தவிர மற்ற முக்கிய வட இந்திய மாநிலங்களில் தியேட்டர்களில் வெளியானது. ஆனால், மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டர்களுக்கு வரவில்லை. பொதுவாக அக்ஷய்குமார் படம் வெளிவந்தால் ஒரு வாரத்திற்குள்ளாகவே 100 கோடி வசூலைத்தாண்டி விடும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் கடந்த பத்து நாட்களில் 25 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. எதிர்பார்த்த தொகையை விடவும் அது மிகவும் குறைவுதான். இதற்கு மேலும் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.
பட வெளியீட்டிற்கு முன்பு படத்தைத் தியேட்டர்களில் வெளியிட தாங்கள் பெரிய ரிஸ்க் எடுப்பதாகவும், இந்தப் படம் 30 கோடி ரூபாய் வசூலித்தாலே அது 100 கோடி ரூபாய் வசூலிப்பதற்கு சமம் என்றும் அக்ஷ்ய்குமார் தெரிவித்திருந்தார்.
அக்ஷய்குமார் படத்திற்கே இந்த நிலைமை என்றால் தென்னிந்தியாவில் வெளியாகும் படங்களின் வசூல் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என திரையுலகில் கவலைப்படுகிறார்கள். அதனால், மக்கள் முழுவதுமாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் பல பெரிய படங்களை பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்கள்.