தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
நடிகர் ஷாருக்கானின் மகள் சஹானா கான். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி போன்று சுதந்திரமானவர். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவார். சினிமாவில் நடிக்க மறுத்து வந்த இவர் படம் இயக்கும் முயற்சியில் இருந்தார். இப்போது அவர் நடிக்க வருகிறார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிசியான நடிகையாக இருக்கிறார். இவரது தங்கை குஷியை சினிமாவில் நடிக்க வைக்க பெரிய தயாரிப்பாளர்களே முயற்சித்து வந்தனர். நடிப்பதற்கான பக்குவம் வரவில்லை என்று தந்தை போனி கபூர் கூறிவந்தார். இந்த நிலையில் குஷி நடிக்க வருகிறார்.
சஹானா கானும், குஷியும் ஒரே வெப் சீரிசில் அறிமுகமாகிறார்கள். சைப் அலிகானின் மகன் இத்தொடரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெட்பிளிக்ஸ் தளம் இதனை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இத்தொடரை ஸோயா அக்தர் இயக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸ் குறித்த தகவல்கள் கசிந்திருந்தாலும், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.