100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
கடந்த சில தினங்களுக்கு முன் மோசடி வழக்கு ஒன்றிற்காக பாலிவுட் நடிகர் சல்மான்கான் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட ஏழு பேருக்கு சம்மன் அனுப்பியது சண்டிகர் போலீஸ். சண்டிகரை சேர்ந்த அருண் குப்தா என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது.
சல்மான் கான் நடத்தி வரும் 'பீயிங் ஹ்யூமன்' என்கிற அறக்கட்டளை சார்பாக இருவர், அருண் குப்தாவை தொடர்பு கொண்டு, இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் விதமாக நகைக்கடை கிளை ஒன்றை ஆரம்பித்து, அதன்மூலம் புதிய வியாபாரம் துவங்குங்கள் என்றும், அதை சல்மான்கான் வந்து அதை திறந்து வைப்பார் என்றும் கூறினார்களாம்.
அவர்கள் பேச்சை நம்பி பீயிங் ஹ்யூமன் ஜுவல்லரி என்கிற பெயரில் கடையை துவங்குவதற்காக சுமார் மூன்று கோடி ரூபாய் வரை முதலீடு செய்தாராம் அருண் குப்தா.. ஆனால் அவர்கள் சொன்னபடி செய்யவில்லை, அதனால் எனக்கு மூன்று கோடி நஷ்டமானது என அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார் அருண் குப்தா
ஆனால் தற்போது ஸ்டைல் கோஷன்ட் என்கிற நகை தயாரிப்பு நிறுவனம் சல்மான்கானுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனது. சல்மான்கானின் பீயிங் ஹியூமன் அறக்கட்டளையின் குளோபல் பார்ட்னராக தாங்கள் இருப்பதாகவும் நகை உருவாக்கம், விற்பனை போன்றவற்றை தாங்கள் தான் மேற்கொண்டு வருவதாகவும் தற்போது புகார் அளித்திருக்கும் நபரின் நிறுவனத்துடன் 2018ல் தாங்கள் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த விஷயத்தில் சல்மான்கானுக்கோ அவரது தங்கைக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என கூறியுள்ள அந்த நிறுவனம், இந்த புகார் குறித்த தங்களது விளக்கங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் காவல்துறைக்கும் அனுப்பி இருப்பதாகவும் கூறியுள்ளது.