மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்திரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய சினிமாவில் வலுவாக காலூன்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர். தென்னிந்திய மொழிகளில் படம் தயாரிப்பது, இங்கே ஹிட் ஆகும் படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்வது என பிஸியாக ஓடிக் கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் ஹிந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை மற்றும் தெலுங்கில் வக்கீல் சாப் என ரீமேக் செய்தார். உதயநிதியை வைத்து ஆர்டிகிள் 15 படத்தை ரீமேக் செய்து வருகிறார். இதுதவிர அஜித்தை வைத்து வலிமை என்கிற நேரடி தமிழ் படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான, மம்முட்டி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்த, தி ஒன் என்கிற படத்தின் ஹிந்தி உட்பட மற்றும் சில மொழிகளின் ரீமேக் உரிமையையும் கைப்பற்றியுள்ளார் போனி கபூர். ஹிந்தியில் மிகப்பெரிய நடிகர் ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். மலையாளத்தில் இந்தப்படம் சரியாக போகாவிட்டாலும் கூட, எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் அரசியல் கதை என்பதால் சில மாற்றங்களை செய்து ரீமேக் செய்தால் படம் ஹிட்டாகும் என நம்பி களத்தில் இறங்கியுள்ளாராம் போனி கபூர்.