அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ஓவர் நைட் பாப்புலர் என்பார்களே அது மாதிரி அர்ஜூன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் ஷாலினி பாண்டே. தன்பிறகு மேரி நிம்மோ என்ற இந்தி படத்தில் நடித்தார்.
அடுத்த படமே பாலிவுட்டா என்ற எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஆனால் அந்த படம் வெற்றி பெறாதது ஷாலினிக்கு பின்னடைவை தந்தது. தமிழில் 100 பிரசண்ட் காதல் படத்தில் நடித்தார். அதுவும் கைகொடுக்கவில்லை. மேலும் சில படங்களில் நடித்தார்.
இப்போது மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பி இருக்கிறார். ஏற்கெனவே ஜெயேஷ்பதி ஜோர்தார் படத்தில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது ஆமீர்கானின மகன் ஜுனைத் கான் அறிமுகமாகும் மகாராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ரா இயக்குகிறார். 1982ம் ஆண்டு நடந்த பிரிஜ்நாத்ஜி மகராஜ் வழக்கை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதில் ஜுனைத் கான் பத்திரிகையாளராக நடிக்கிறார்.
மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் முடிந்திருக்கிறது. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.