சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

வேகமாக வளர்ந்து வந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கம், போதை மருந்து புழக்கம், காதல் தோல்விகள் போன்றவை அவரது தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது. அவரது தற்கொலை தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுஷாந்த் சிங் வாழ்க்கையை குறிப்பாக அவரது தற்கொலை விவகாரத்தை மையமாக வைத்து “நய்யே: தி ஜஸ்டிஸ்” என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கி உள்ளனர். இதில் சுஷாந்த் சிங் வேடத்தில் ஜூபர் கானும், அவரது காதலி ரியா சக்கரவர்த்தி வேடத்தில் ஸ்ரேயா சுக்லாவும் நடித்துள்ளனர். திலீப் குலாட்டி இயக்கி உள்ளார்.
"சுஷாந்தின் தற்கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் இந்த படம் அந்த வழக்கின் போக்கை பாதிக்கும். மேலும் என் மகனை போதைக்கு அடிமையானவன் போன்றும், பெண்கள் விஷயத்தில் பலகீனமானவன் போன்றும் படம் சித்தரிக்கிறது. எனவே இந்த படத்தை தடை செய்ய வேண்டும்" என்று சுஷாந்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்துக்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரங்களில் தெளிவு இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கை மேலும் நல்ல தெளிவுகளுடன் மறு முறையீடு செய்ய சுஷாந்தின் தந்தை முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் படத்தை வெளியீட்டுக்கு முன்னதாக சுஷாந்தின் தந்தைக்கு திரையிட்டுக் காட்ட படத் தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.