பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சினிமா தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
கடந்த வருட கொரோனா அலை ஏற்பட்ட போது பல திரையுலகப் பிரபலங்கள் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்தார்கள். தற்போது மீண்டும் அப்படி ஒரு பாதிப்பு நிலை ஏற்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்காக ஹிந்தி நடிகர் சல்மான் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.
இது குறித்து இந்திய மேற்கு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் திவாரி கூறுகையில், “சினிமா தொழிலாளர்கள் பலரது பெயரை சல்மான் கானிடம் வழங்கியுள்ளோம். சல்மான் கான் 25,000 தொழிலளார்களுக்கு தலா 1500 ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் 35 ஆயிரம் மூத்த தொழிலளார்கள் பெயர்ப் பட்டியலை அளித்துள்ளோம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாத உதவித் தொகையாக 5000 ரூபாய் வழங்க அவர்கள் சம்மதித்துள்ளார்கள். தொழிலளார்களின் வங்கிக் கணக்குகளை உறுதி செய்தபின் நேரடியாக அவர்களது கணக்கிலேயே பணத்தை செலுத்திவிடுவார்கள்,” என அவர் தெரிவித்துள்ளார்.