ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 2017ல் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 'விக்ரம் வேதா' படம் ரிலீஸானது. புஷ்கர் - காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது. இந்தப்படத்தின் கதை ஹிந்திக்கும் செட்டாகும் என்பதால், ஆமீர்கான் மற்றும் சயீப் அலி கான் இருவரையும் இணைத்து ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் இப்படத்தில் இருந்து ஆமீர்கான் வெளியேறிவிட்டார் என்றும், சீனாவில் வெளியிடும் அளவுக்கு இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்க ஆமீர்கான் நினைத்து, இந்த கொரோனா சூழலில் அது முடியாமல் போனதால் அவர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
அதையடுத்து ஆமீர்கானுக்கு பதிலாக, அந்த கேரக்டரில், ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல். சோஷியல் மீடியாவில் பரவியது ஆனால் தற்போது அவரும் இந்தப்படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ; தி நைட் மேனேஜர்' என்கிற வெப் சீரிஸில் நடிக்க தேதிகளை ஒதுக்கி தந்துள்ள ஹிருத்திக் ரோஷன், கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளித்தள்ளி போகும் விக்ரம் வேதா ரீமேக்கிற்கு. தான் கால்ஷீட் தரமுடியாத நிலையில் இருப்பதாக கூறி விலகி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.