பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை |

நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகர், நடிகைகளை அதிகமாக தாக்கி வருகிறது. அதுவும் குடும்பத்துடன் தாக்கி வருவது அதிகரித்துள்ளது.
முதலில் அமிதாப்பச்சன் குடும்பத்தை தாக்கியது. சமீபத்தில் தீபிகா படுகோனோ குடும்பத்தை தாக்கியது. தற்போது நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தை தாக்கி உள்ளது. எப்படியோ அவர் மட்டும் தப்பித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 10 நாட்கள் எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. என் மாமனார், மாமியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து சமிஷா, வியான் ராஜ், என் அம்மா, கடைசியாக ராஜ் என அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அரசின் வழிகாட்டுதலின் படி அனைவரும் வீட்டுத் தனிமையில், அவரவர் அறையில் உள்ளனர். மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி வருகிறோம். வீட்டுப் பணியாளர்கள் இருவருக்கும்கூட தொற்று உறுதியானது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடவுளின் அருளால், அனைவரும் தேறி வருகின்றனர். எனக்குத் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
விதிகளின் படி அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உடனடி உதவி செய்த மும்பை மாநகராட்சி மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நன்றி. உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து எங்களை உங்கள் பிரார்த்தனையில் வைத்திருங்கள். தயவு செய்து முகக் கவசம் அணியுங்கள், கிருமி நாசினி பயன்படுத்துங்கள், பாதுகாப்பாக இருங்கள். கோவிட் தொற்று இருக்கிறதோ, இல்லையோ நீங்கள் மனரீதியில் நேர்மறைச் சிந்தனையோடு இருங்கள் என்று கூறியுள்ளார்.