வட இந்தியாவில் நிகழ்ச்சி - 'கேம் சேஞ்சர்'ஐத் தொடர்ந்து 'புஷ்பா 2' | 'கங்குவா' இரைச்சல் சத்தம், ரசூல் பூக்குட்டி 'கமெண்ட்' | கங்குவா - 'கேமியோ'வாக வந்த கார்த்தி பெயர் இரண்டாவது இடத்தில்… | வளர்ப்பு மகள் மீது 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து நடிகை | புதுப்படத்தில் கமிட்டான ரோஷினி ஹரிப்பிரியன்! | பத்து வருடங்களுக்கு முன்பே அமரனுடன் நட்பு பாராட்டிய பிரித்விராஜ் | குழந்தைகள் தினம் கொண்டாடிய மம்முட்டி | துல்கர் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்கா சித்தார்த்தின் மிஸ் யூ? | ராஷி கண்ணாவுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி | அப்பா- அம்மாவின் பிடிவாதம் ஏற்படுத்திய பாதிப்பு! - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல்! |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணவத். தற்போது 'தலைவி' தமிழ்ப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் கங்கனா. கடந்த இரண்டு தினங்களாக மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பின் நடக்கும் கலவரங்கள் குறித்து தன்னுடைய டுவிட்டர் கணக்கில் அடிக்கடி பதிவுகளை இட்டு வந்தார்.
நேற்று மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கும் டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
அவருடைய சில கருத்துக்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததாகக் கூறி டுவிட்டர் நிறுவனம் அவருடைய கணக்கை தடை செய்துவிட்டது. தொடர்ந்து அவருடைய கணக்கிலிருந்து வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிட்டு வந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளோம் என டுவிட்டர் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.