ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கொரோனா தொற்றுக்கு இதுவரை பல பாலிவுட் நடிகர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் இறந்தும் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரன்பீர் கபூருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ரன்பீருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அப்போது செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ரன்பீர் கபூரின் தாயும், நடிகையுமான நீது கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகிறது. உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்றார்.
இதேபோல பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.